தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி., பட்ஜெட் 2019: பசுக்களுக்காக ரூ.647 கோடி ஒதுக்கீடு! - bjp

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் 2019-2020-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தாக்கல் செய்தார். இதில், பசு பாதுகாப்பிற்காக ரூ.647 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

யோகி தாக்கல் செய்த பட்ஜெட்

By

Published : Feb 7, 2019, 7:33 PM IST

உத்தரபிரதேச மாநிலத்தில், 2019 - 20ம் ஆண்டிற்கான பட்ஜெட், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் ராஜேஷ் அகர்வால் தாக்கல் செய்தார். இதில் பசுக்கள் பாதுகாப்புக்கு ரூ.647 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கிராமப்புறங்களில் உள்ள மாடுகள் மற்றும் கோசாலைகளை பராமரிக்க ரூ.247.60 கோடியும், நகர்ப்புறங்களில் உள்ள மாடுகள் மற்றும் கோசாலைகளை பராமரிக்க ரூ.200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் மேம்பாட்டிற்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர வைக்க பல்வேறு நடவடிக்கையில் இறங்கியுள்ள உத்தரபிரதேச அரசு, விவசாயிகளையும் ஏழை மக்களையும் வரும் விதத்தில் பட்ஜெட்டை வடிவமைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details