ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள எல்லைப் பாதுகாப்பு பயிற்சி மையத்தில் வினோத் சிங் என்பவர் காவலராகப் பணியாற்றிவருகிறார். 45 வயதான இவர் 160 கிலோ எடையுடன் இருந்த நிலையில், அவர் பணியிலிருந்தபோது கடந்த ஜூலை 17ஆம் உயிரிழந்துள்ளார்.
இவரது மரணம் குறித்து எல்லை பாதுகாப்புத் துறை விசாரணை மேற்கொண்ட போதுதான் அதிர்ச்சிக்குரிய தகவல் ஒன்று தெரிவந்துள்ளது. அதிக உடல் பருமன் கொண்ட வினோத் சிங் அண்மையில் உடல் பரிசோதனை மேற்கொண்டார். பாதுகாப்புப் படையில் பணியாற்ற ஆரோக்கியமான உடல்தகுதி தேவைப்படும் நிலையில், 160 கிலோ எடையுடன் 52.8 பி.எம்.ஐ (B.M.I.) கொண்ட இவருக்கு உடல் தகுதி உள்ளதாக மருத்துவர் அறிக்கை அளித்துள்ளார்.