தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள்கள் பறிமுதல்! - ஒடிசாவில் போதை பொருட்கள் பறிமுதல்

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்களை விற்க முயன்ற இரண்டு நபரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Brown sugar worth Rs 1 crore seized in Odisha, two held
Brown sugar worth Rs 1 crore seized in Odisha, two held

By

Published : Jun 4, 2020, 8:13 PM IST

ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள கந்தகிரி பகுதியில் போதை பொருள்கள் விற்பனை செய்வதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ போதைப் பொருள்களை விற்க முயன்ற இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

இதனிடையே சம்பவ இடத்தில் தப்பி ஓடிய சந்தேகத்திற்குரிய நபரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த போதைப் பொருள்கள் மேற்கு வங்கத்தில் இருந்து ஒடிசாவின் பாலசூர் மாவட்டத்தின் ஜலேஸ்வர் பகுதி வழியாக வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களிடம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details