தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரிக்ஸ் நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்பு! - பிரிக்ஸ் நாடுகள் ஆலோசனை

டெல்லி: உலகளவில் கரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும், அவற்றை எதிர்கொள்ள சாத்தியமான கூட்டு நடவடிக்கைகள் குறித்தும் பிரிக்ஸ் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இன்று நடத்தவுள்ள ஆலோசனையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கவுள்ளார்.

BRICS  Foreign Ministers  COVID-19  S. Jaishankar  பிரிக்ஸ் நாடுகள்  பிரிக்ஸ் நாடுகள் ஆலோசனை  ஜெய்சங்கர்
பிரிக்ஸ் நாடுகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்பு

By

Published : Apr 28, 2020, 1:04 PM IST

கரோனா தொற்றை கூட்டாக எதிர்கொள்ளும் வழிகள் குறித்து பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர். இதில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்ள இருக்கிறார்.

இந்த காணொலி கூட்டத்துக்கு ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்ஜே லாவ்ரோவ்(Sergey Lavrov) தலைமையேற்கவுள்ளார். இதில், உலகளவில் கரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், இந்த பெருந்தொற்றுக்கு எதிரான சாத்தியமான கூட்டு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக ரஷ்ய நாட்டு ஸ்பூட்னிங் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க:'கரோனாவிலிருந்து மீண்டவர்கள் 22.17 விழுக்காட்டினர்'

ABOUT THE AUTHOR

...view details