ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே உள்ள குந்தி (Khunti) மாவட்டத்தில் மாட்டிறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி மூன்று பேர் மீது வன்முறை கும்பல் ஒன்று சரமாரி தாக்குதலில் ஈடுபட்டது.
மாட்டிறைச்சி விற்றதாக சந்தேகம்: அடித்தே கொல்லப்பட்ட இளைஞர்!
ராஞ்சி: மாட்டிறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி மூன்று பேர் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
lynching
இதில் லபுங் என்ற கிராமத்தைச் சேர்ந்த கிளன்டஸ் பர்லா என்ற நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் விறுவிறுவென பரவியதையடுத்து, அங்கு பதற்றமான சூழல் உருவாகியது.
இதையடுத்து, அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கிராமத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.