நேபாளத்தின் புதிய வரைபடம் இந்திய எல்லைப் பகுதிகளான கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகியவற்றின் மீது உரிமை கோரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பிக்கப்பட்ட வரைபட மசோதா நேபாளத்தின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய சேனல்களுக்கு நேபாளத்தில் தடை, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு நேபாளிகள் நுழைவது உள்ளிட்ட சம்பவங்கள் இருநாடுகளுக்கு இடையே பதற்றத்தை அதிகரித்தது.
இதுகுறித்து பாஜக எம்பி அல்மோரா அஜய் தம்டா பேசுகையில், ''இந்தியா - நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ள நெருங்கிய உறவை மனதில் கொண்டு விரைவில் எல்லைப் பிரச்னைக்கு தீர காணப்படும்'' எனத் தெரிவித்தார்.
இதனிடையே தனக்பூர் எல்லையில் அமைந்துள்ள தடை செய்யப்பட்ட பகுதிகளில் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் நுழைய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:நேபாள நாட்டினர் தவறவிட்ட ரூ.25 ஆயிரம் - காவல்துறையிடம் ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ ஓட்டுநர்!