இந்திய - சீன எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நாளை (ஜூன் 19) நடைபெறவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த நிலையில், ஈடிவி பாரத் செய்தியாளரைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா பேசுகையில், 'நமது அண்டை நாடுகள் உடனான உறவு முறை, தற்போது இயல்பான முறையில் இல்லை. நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் உடனான உறவுகளைப் பலப்படுத்துவது அவசியம். எனவே, இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தையின் மூலம் சுமுக முடிவுகளை எட்டவேண்டும்.