ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பீட்டர் முகர்ஜிக்கு மும்பை உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இக்கொலை வழக்கில் பீட்டர் முகர்ஜிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், சிபிஐயின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஆறு வாரகாலதடை விதித்துள்ளது. எனவே, பிணை வழங்கப்பட்ட நிலையிலும் பீட்டர் முகர்ஜியால் வெளியே வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இரண்டு லட்சம் ரூபாய் உத்தரவாதத் தொகையுடன் பீட்டர் முகர்ஜிக்கு நீதிபதி நிதின் சாம்ப்ரே பிணை வழங்கினார். தனது மகள் விதி, மகன் ராகுல் உள்ளிட்ட சாட்சியங்களை பீட்டர் முகர்ஜி சந்திக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.