ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வந்தது. பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லை பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டுவந்தனர். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடியை கொடுத்தது.
இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் உடல்கள் கண்டுபிடிப்பு! - பாகிஸ்தான் பயங்கரவாதம்
ஸ்ரீநகர்: இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் உடல்கள் ஜம்மு-காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Jammu
இதனிடையே, ஆகஸ்ட் மாதத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த பாகிஸ்தான் ராணுவத்தினரின் உடல்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், ரயில் போக்குவரத்து, வர்த்தகம் ஆகிய அனைத்தையும் பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் நிறுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Sep 10, 2019, 7:56 AM IST