பிகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், கங்கை நதியின் அருகே அமைத்துள்ள வயல்களில் விவசாய பணிகள் மேற்கொள்வதற்காக படகில் இன்று (நவம்பர் 5) சென்றனர்.
பிகாரில் படகு கவிழ்ந்து விபத்து! - பிகாரில் படகு கவிழ்ந்து விபத்து
பாகல்பூர்: பிகார் மாநிலம் கங்கை நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கினர்.
அப்போது, டன்டாங்கா காடு அருகே நீரின் வேகம் அதிகரித்ததால், படகு நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர், நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "படகு கவிழ்ந்ததில் 100க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கினர். அவர்களில் 30 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்" என்றனர்.