புதுச்சேரி: விசைப்படகுகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட திடீர் தீயை, இரண்டு மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
புதுச்சேரி, தேங்காய்திட்டுப் பகுதியிலுள்ள பழைய துறைமுகத்தின் அருகே மீனவர்கள் விசைப்படகுகள் தயாரிக்கும் ஆலை ஒன்றுள்ளது. இன்று (ஆகஸ்ட் 21) அதிகாலை ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அந்தப் பகுதியிலுள்ள பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மளமளவென எரிந்து கொண்டு இருந்த தீயை கட்டுபடுத்தினர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், இரண்டு தீயணைப்பு வாகனத்தின் மூலம், இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது.
விசைபடகு தயாரிக்கும் நிறுவனத்தில் தீ; 2 மணிநேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்! இந்த தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது . மேலும் இத்தீவிபத்தில் ஏற்பட்ட பொருள் சேதம் குறித்தும் முதலியார் பேட்டை காவல் துறையினர் தகவல் சேகரித்து வருகின்றனர்.