தொழிற்சாலையில் வெடித்துச் சிதறிய கொதிகலன்: உயிருக்குப் போராடும் 2 தொழிலாளர்கள் - Telangana factory Boiler exploded
ஹைதராபாத்: சுல்தான்பூர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்துச் சிதறிய விபத்தில், பலத்த காயமுற்ற இரண்டு தொழிலாளர்கள் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
Telangana burst into boiler at factory
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் சுல்தான்பூர் பகுதியிலுள்ள சிறிய தொழிற்சாலையில் நேற்று கொதிகலன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அங்கிருந்த மூன்று வாகனங்கள் தீக்கிரையாகின. மேலும் இரண்டு தொழிலாளர்கள் பலத்த காயமுற்றனர். இந்தச் சப்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்து உயிருக்குப் போராடிய தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்களும் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: காவலருக்கு தீ வைத்த தோழி! - காரணம் என்ன?