தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேர்தல் அலுவலர்கள் குழு மீது வெடிகுண்டு தாக்குதல் - வெடிகுண்டு தாக்குதல்

சத்திஸ்கர்: தேர்தல் அலுவலர்கள் குழு வந்த வாகனம் மீது நக்சலைட்டுகள் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெடிகுண்டு தாக்குதல்

By

Published : Apr 19, 2019, 11:51 AM IST

சத்திஸ்கர் மாநிலம், தானோரா பகுதியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை முடித்து கொண்டு தேர்தல் அலுவலர்கள் குழு ஒன்று, நான்கு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பகுதியில் மறைந்திருந்த நக்சலைட்டுகள் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த வாகனம் வெடித்து சிதறியது. ஆனால் விபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் ஏதுவும் வரவில்லை என மாவட்ட ஏஎஸ்பி ஆனந்த்குமார் சாஹூ தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் அலுவலர் ஒருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details