தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அருவருக்கத்தக்க கறுப்பு சந்தை - சைபர் குற்றம்

போலி இணையதளம் மூலம் முக்கிய மருந்துகளை விற்பனை செய்வதில் சைபர் குற்றவாளிகள் மிகவும் தீவிரமாக உள்ளனர் என்ற செய்திகள் பரவலாக உள்ளன. வைரஸ் நெருக்கடி தொடங்கிய உடனேயே, முகமூடிகள் மற்றும் சுத்திகரிப்பான் விற்பனையில் கறுப்புச் சந்தை அதன் மோசமான வேட்கைகளைத் தொடங்கியது.

market
market

By

Published : Jul 20, 2020, 1:51 AM IST

கடுமையான போர்களில், கழுகுகள் மனித சதைக்காக அவற்றின் அருவருப்பான சிறகுகளை விரிக்கும் காட்சி நம்மை நிலைகுலைய வைக்கும். கோவிட்19-க்கு எதிரான மனித இனத்தின் போரின்போது அதிக லாபத்திற்காக மனித கழுகுகளின் பேராசை உண்மையில் வெறுக்கத்தக்கதாகவும் அதிர்ச்சியூட்டுவதாகவும் உள்ளது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8.80 லட்சத்திற்கு அருகில் உள்ளதால் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை எட்டியுள்ளது, 23,000 பேரின் மரணம் முற்றிலும் இதயத்தைத் பிழிகிறது.

பயங்கரமான நோயை குணமாக்க ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து கொண்டிருக்கிறது, அவை எப்போது கிடைக்கும் என்றும் நமக்குத் தெரியாது.

இதற்கிடையில், மோசமான நோயாளிகளுக்கு சில நிவாரணங்களை வழங்கும் ரெமிடிசிவிர், லோபினாவிர் மற்றும் ரிடோனாவிர், டோசிலிஜுமாப் ஊசி போன்ற சில மருந்துகள் அவற்றின் உண்மையான விலையைவிட ஐந்து முதல் பத்து மடங்கு விலையில் விற்கப்படுகின்றன. கார்ப்பரேட் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவக் கடைகளிலும் இதே நிலைதான்.

அசாதாரண சூழ்நிலையில் விலைகளை அதிகமாக உயர்த்தி அதிக லாபம் சம்பாதிப்பது என்பது நாடு முழுவதும் உள்ள மொத்த விற்பனையாளர்களின் பொதுவான நெறிமுறையற்ற நடைமுறையாகிவிட்டது!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் அனுமதிக்கப்பட்ட மருந்துகள் மருத்துவமனைகளில் சோதனை பயன்பாட்டிற்காக நேரடியாக மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் விதிவிலக்கான சில சந்தர்ப்பங்களில், மருத்துவர்களின் பரிந்துரைப்படி, அத்தகைய மருந்துகள் மனிதாபிமான அடிப்படையில்விற்கப்படலாம் என்ற பரிந்துரை, மருந்துகள் வேறுவழியில் தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பளித்தது. அதைப்பற்றிய புகார்கள் பெரிய அளவில் வந்ததால், மத்திய கணக்கு தணிக்கையாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அத்தகைய மருந்துகளை கறுப்புச் சந்தைக்கு திருப்பிவிடுவதை நிறுத்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இது போன்ற சிக்கலான சூழ்நிலையைப் பார்க்கும்போது, தற்போது ​​நமக்கு மிகவும் பயனுள்ள ஒரு செயல் திட்டம் தேவைப்படுகிறது.

காப்புரிமையைத் கருத்தில் கொள்ளாமல், கொடிய கோவிட்டை குணப்படுத்தும் எந்தவொரு மருந்தையும் கிடைக்க உலக சுகாதார அமைப்பு விரும்புகிறது.

ட்ரம்ப் அரசாங்கம் “கைலீட்” என்ற மருந்து நிறுவனத்துடன் மூன்று மாதங்களுக்கு அது தயாரிக்கும் ரெமிடிசிவிர் மருந்து அமெரிக்காவில் மட்டுமே கிடைக்க வேண்டும் என்று ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது. கைலீட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதுபோல சிப்லா, ஹெட்டெரோ, மைலான் ஆகிய நிறுவனங்களும் ரெமிடிசிவிர் மருந்தை வெவ்வேறு பெயர்களில் தயாரிக்க அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அவற்றின் விலைகள் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை அழித்து வருகின்றன.

டோசிலிஜுமாப், ரெமிடிசிவிர் தேவைப்படும் நோயாளிகளின் உறவினர்கள் அவர்களின் ஆதார் அட்டைகள், மருத்துவரின் பரிந்துரை மற்றும் கோவிட் அறிக்கை ஆகியவற்றின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மருந்துகளின் இருப்பு குறையாமல் இருப்பதில் ஹரியானா குறிப்பாக கவனம் செலுத்தி வருகிறது.

போலி இணையதளம் மூலம் முக்கிய மருந்துகளை விற்பனை செய்வதில் சைபர் குற்றவாளிகள் மிகவும் தீவிரமாக உள்ளனர் என்ற செய்திகள் பரவலாக உள்ளன. வைரஸ் நெருக்கடி தொடங்கிய உடனேயே, முகமூடிகள் மற்றும் சுத்திகரிப்பான் விற்பனையில் கறுப்புச் சந்தை அதன் மோசமான வேட்கைகளைத் தொடங்கியது. மேலும், சில கும்பல்கள் மூச்சுத் திணறல் நோயாளிகளுக்கு மிக அவசியமான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு முளைத்துள்ளன.

சரியான வாழ்வாதாரம் இல்லாத நிலையில் சிரமப்படும் மக்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் அதிக விலையில் விற்பதை கண்டு சத்தான உணவை சாப்பிடுவதை விட்டுவிட்டனர். மத்திய மற்றும் மாநிலங்களில் உள்ள அரசாங்கங்கள் அந்த விலைகளை சரிபார்த்து பதுக்கி வைத்திருப்பவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுத்து, மேலும் நெருக்கடி ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க: ரயில்களை தனியார்மயமாக்குவது யாருக்கு நன்மை பயக்கும்?

ABOUT THE AUTHOR

...view details