தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள நவுகாம் பகுதியைச் சேர்ந்தவர் குல் முகமது மிர். இவரது வீட்டிற்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
பாஜக பிரமுகரை சரமாரியாக சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்! - தெற்கு காஷ்மீர்
காஷ்மீர்: தெற்கு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் பாஜக மாவட்ட துணைத் தலைவரை வீடு புகுந்து சரமாரியாக சுட்டுக் கொன்றனர்.
3194400
ஆனால் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பின்னர் பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை தேடிவருகின்றனர். இந்தச் சம்பவத்திற்கு தேசிய மாநாடு கட்சியின் தலைவரும், காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.