தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவினர் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் - புதுச்சேரி பாஜக

புதுச்சேரி: குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பதிலாக வங்கி கணக்கில் பணத்தை அரசு செலுத்தாததால் பாஜகவினர் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி
BJP workers blockaded civil supply office

By

Published : Dec 3, 2019, 11:18 AM IST

புதுச்சேரியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது பின்னர் இலவச அரிசிக்கு பதிலாக அவரவர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வங்கிக் கணக்கில் பொதுமக்களுக்கு பணம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அதிகளவில் எழுந்தது.

இந்நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கடந்த 17 மாதங்களாக அரிசிக்கு பதில் பணம் வழங்கப்படவில்லை எனக்கூறி புதுச்சேரி பாஜக சார்பில் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பாஜகவினர் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகை

ஒரு கட்டத்தில் அங்கு போடப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றி போராட்டக்காரர்கள் அலுவலகம் உள்ளே நுழைய முற்பட்டனர் அதனை காவல்துறையினர் தடுத்தனர், இதையடுத்து பாஜகவினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க: மலைச்சாலை போக்குவரத்து பாதிப்பினால் பொருட்களை தலையில் சுமந்து செல்லும் பொதுமக்கள்!

ABOUT THE AUTHOR

...view details