மக்களவைத் தேர்தலுக்காக பாஜக நாடு முழுவதும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்த்த நிலையில் ஹரியானாவில் பாஜக தனித்து போட்டியிடும் என, அதன் தேசிய செயலாளரும் ஹரியானா மாநில பொருப்பாளருமான அனில் ஜெயின் கூறியுள்ளார்.
ஹரியானாவில் தனித்து களமிறங்கும் பாஜக! - போட்டியிடும்
டெல்லி: "ஹரியானாவில் நடக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும்" என்று, பாஜக தேசிய செயலாளர் அனில் ஜெயின் கூறியுள்ளார்.
பாஜக
முன்னதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில், பாஜக தனித்து போட்டியிடபோவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் 10 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.