பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதேஷ் வர்மா, காணொலி வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், விவேகமற்ற கேள்விகளால், நாட்டு மக்கள் மத்தியில் பீதியை கிளப்புவதாக காங்கிரஸ் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், இந்த இக்கட்டான சூழலில் பாரம்பரிய கட்சி ஏழை மக்களுக்கு என்ன செய்தது? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி விவேகமற்ற பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்தப் பெருந்தொற்று நேரத்தில் ஏழைகளுக்கு காங்கிரஸ் என்ன செய்தது? என்பதை அவர் முதலில் கூற வேண்டும்.
கரோனா தீநுண்மி காரணமாக முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டபோது, கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நிதி தொகுப்பினை அரசு வழங்கியது. ஆனால் காங்கிரஸ் என்ன செய்தது?
மகாராஷ்டிராவில் 16 தொழிலாளர்கள் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதற்கு எதிராக பாஜக குரலெழுப்புகிறது. இந்நேரத்தில் மகாராஷ்டிரா அரசை புகழ்ந்து பேசுபவர்கள் எங்கே சென்றனர், இதனை நல்ல விஷயம் என்கிறார்களா?
'விவேகமற்ற கேள்விகளால் பீதியைக் கிளப்ப வேண்டாம்'- காங்கிரசுக்கு பாஜக கண்டனம் மாநில அரசு ரயில் தண்டவாளங்களில் தொழிலாளர்கள் செல்ல அனுமதித்ததுதான், அந்த மரணங்களுக்கு நேரடியாக வழிவகுத்தது” என்றார்.
இதையும் படிங்க: 'மகாராஷ்டிரா ரயில் விபத்து போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'