உத்தரப் பிரதேச மாநிலம் தவ்ரஹ்ரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரேகா வர்மா. இவருக்கு பாதுகாப்பு அளிக்க 24 மணிநேரமும் காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவலரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்பி! - உத்தரபிரதேசம்
உத்தரப் பிரதேசம்: பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரேகா வர்மா, காவலர் ஒருவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களில் ஒருவரான ஷியாம் சிங் என்பவரை ரேகா வர்மா பலர் முன்னிலையில் பளாரென கன்னத்தில் ஓங்கியறைந்தார்.
இது குறித்து காவலர் ஷியாம் சிங், ‘எந்த ஒரு காரணமும் இல்லாமல் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் என்னைக் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். என்னை அவமானப்படுத்தும் விதமாக பேசினார். மேலும், என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டிவிட்டு உடனடியாக சென்று விட்டார். இதனையடுத்து நான் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விட்டேன். ரேகா வர்மா மீது முகமதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்றார்.