தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவிலிருந்து காங்கிரஸில் இணைந்த சத்ருகன் சின்ஹா! - பாஜக எம்பி சத்ருகன் சின்ஹா

டெல்லி: பாஜக எம்பியான சத்ருகன் சின்ஹா இன்று காங்கிரஸில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

BJP MP Shatrughan sinha joint congress

By

Published : Apr 6, 2019, 1:45 PM IST

பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவரான சத்ருகன் சின்ஹா அக்கட்சியை சமீபகாலமாக விமர்சித்து வந்தார். பீகார் மாநிலம் பாட்னா மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சின்ஹா இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.

சமீபத்தில் சத்ருகன் சின்ஹா பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ட்வீட் செய்திருந்தார். அதில் ‘போக போகும் பிரதமர் அவர்களே, நீங்கள் ஏன் உங்கள் பெயரை சொல்லவதற்காக பணம் கொடுத்து, டிவி சேனல்களை வாங்குகிறீர்கள்? இது தேவையா?’ என கேள்வி எழுப்பி இருந்தார். சத்ருகன் சின்ஹாவின் இந்த ட்வீட்டால் பாஜக வட்டாரத்தில் பரப்பரப்பானது.

இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் சத்ருகன் சின்ஹா, கே.சி.வேணுகோபால், ரன்தீப் சுர்ஜிவாலா முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

ABOUT THE AUTHOR

...view details