மத்தியபிரதேச பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய்வர்ஜியா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேசத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார் எனக் கூறியுள்ளார்.
ராகுல் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு: எல்லை மீறிய பாஜக எம்.எல்.ஏ.! - பாஜக எம்.எல்.ஏ
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறித்து எல்லை மீறிய வகையில் சர்ச்சை கருத்து ஒன்றை மத்தியபிரதேச மாநில பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய்வர்ஜியா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ராகுலின் பெயரை முன்னதாக பப்பு என்று அழைத்தோம். அந்த பெயர் பாதிப்பில்லாத வகையிலும், பாசத்திற்குரிய பெயராகவும் இருந்தது. ஆனால் தற்போது ராகுல்காந்தி தேசத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அதனால் தற்போது அவரது பெயரை பப்புவிலிருந்து, கழுதைகளின் தலைவர் என மாற்றியுள்ளோம் என எல்லை மீறிய வகையில் கடுமையாக விமர்சித்தார்.
ஆகாஷ் விஜய்வர்ஜியாவின் இந்தப் பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். மத்தியபிரதேச எம்எல்ஏ ஆகாஷ் விஜய்வர்ஜியா, பாஜக கட்சியின் மூத்த தலைவரான கைலாஷ் விஜய்வர்ஜியாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.