மேலும் அவர் கூறுகையில், பாஜகவை சேர்ந்த பலர் அந்த கட்சியில் இருந்து வெளியேறி வருவதாகவும், 147 தொகுதிகளில் வேட்பாளர்களை போட்டியிட வைப்பதற்குக் கூட அந்த கட்சியில் உறுப்பினர் இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.
பாஜக தோல்வி உறுதி -பிஜூ ஜனதா தளம் - தோல்வி
புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் தோல்வி உறுதி என பிஜு ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஷ்மித் பாத்ரா கூறியுள்ளார்.
ுக
இதுகுறித்து அவர் பேசுகையில், ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வி அடையும் என தெரிவித்தார். பாஜக வேட்பாளர்களை அறிவிக்காதது ஏன் என கேள்வியெழுப்பிய அவர்,
தனக்குத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
பிஜு ஜனதா தளம், காங்கிரஸ் முன்னதாகவே முழு வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட நிலையில், பாஜக அறிவிக்காமல் இருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும், மூன்று மக்களவை உறுப்பினர்களும் பிஜு ஜனதா தளத்தில் இருந்து பாஜகவில் சேர்ந்துள்ளனர்.