உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்தவர் பாஜக தலைவர் அனுராக் சர்மா. இவர் புதன்கிழமை இரவு, ஜீவாலா நகரில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே சர்மா உயிரிழந்தார்.
சர்மாவுக்கு குற்றவியல் பின்னணி இருந்ததாகவும், அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது மனைவி ஷாலினி சர்மா ராம்பூரில் பாஜக கவுன்சிலராக உள்ளார்.