தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தனக்குள் தூங்கிய நடிகையைத் தட்டி எழுப்பிய பாஜக எம்பி! - hema malini

மதுரா: பாஜகவின் எம்பியும் நடிகையுமான ஹேம மாலினி உத்தரப் பிரதேச மாநிலம்  மதுராவில் ஆடிய நடனம் மக்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

ஹேம மாலினி எம்பி

By

Published : Aug 3, 2019, 9:43 AM IST

பாலிவுட்டின் 80' களின் கனவுக் கன்னியாக இருந்தவர் ஹேமாமாலினி. நடிப்பிலிருந்து ஓய்வுபெற்ற பின், அதிரடியாக அரசியலுக்கு நுழைந்தவர். சமீபத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தைச் சுத்தம் செய்யத் துடப்பத்தை எடுத்ததன் மூலம் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளானார்.

இந்நிலையில், தற்போது மதுரா தொகுதி மக்களவைத் தொகுதி உறுப்பினரான ஹேம மாலினி, பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீ ராதா ராமன் கோயிலில் ஹரியாலி தீஜ் பண்டிகையின் 'ஜுலான் உட்சவ்' நிகழ்ச்சியில் நடனமாடி அங்கிருந்தவர்களை பரவசப்படுத்தினார்.

ஹேமாமாலினியின் நடனத்தைக் பார்த்தவர்கள், 'வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் ஒன்னவிட்டு போகல' என்ற தொனியில் சிலர் நக்கலாக பேசி சிரித்துக்கொண்டே சென்றனர்.

நடனமாடிய ஹேம மாலினி எம்பி

ஹரியாலி தீஜ்

ஹரியாலி தீஜ் என்பது வட இந்தியாவில் இந்து பெண்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் ஒரு விழாவாகும். பிரிந்திருந்த சிவனும் பார்வதியும் ஒன்றிணைந்ததைக் நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details