தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா , ஜிடிபி, சீன விவகாரம்... மோடியின் பொய் பட்டியல் - காங்கிரஸ் விமர்சனம்

டெல்லி: கரோனா, ஜிடிபி, சீன பிரச்னை போன்ற விவகாரங்களில் உண்மைக்கு புறம்பான கருத்துகளை பிரதமர் மோடி தொடர்ந்து பேசிவருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

By

Published : Jul 19, 2020, 10:33 PM IST

ஒரு பக்கம் கரோனாவின் கோர தாண்டவத்தில் சிக்கி இந்தியா தவித்துவரும் நிலையில், மற்றொரு பக்கம் எல்லை பிரச்னை காரணமாக சீனாவுடனான உறவில் பதற்றம் நிலவிவருகிறது. பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் விளைவாக பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா, ஜிடிபி, சீன பிரச்னை போன்ற விவகாரங்களில் உண்மைக்கு புறம்பான கருத்துகளை பிரதமர் மோடி தொடர்ந்து பேசிவருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பாஜக பொய்களை நிறுவனமயமாக்கியுள்ளது என தெரிவித்த ராகுல் காந்தி, கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, சீன விவகாரம் குறித்த விவகாரங்களில் பொய்யான தரவுகளை அக்கட்சி பரப்பிவருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா சோதனையை குறைத்து உயிரிழப்பு குறித்து தவறான தகவல்கள்.

ராகுல் காந்தி ட்வீட்

புதிய முறையை பயன்படுத்தி உள்நாட்டு மொத்த உற்பத்தியை கணக்கிடுதல். ஊடகத்தை அச்சுறுத்தி சீனா ஆக்கிரமிப்பு குறித்து பொய்யான செய்திகள் வெளியிடுதல். இந்த மாயை விரைவில் உடையும். இந்தியா அதற்கான விலையை கொடுக்கும்" என பதிவிட்டுள்ளார்.

வெளிநாட்டு ஊடகத்தின் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ராகுல் காந்தி தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். முன்னதாக, மோடி செய்த தொடர் தவறுகளால்தான் சீனா, இந்தியாவுடனான மோதல் போக்கை கடைப்பிடிப்பதாக ராகுல் விமர்சித்திருந்தார். கடந்த ஒன்பது காலாண்டுகளாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் விமர்சித்திருந்தார்.

இதையும் படிங்க: கனமழையால் சரிந்த வீடு: வைரல் காணொலி

ABOUT THE AUTHOR

...view details