கடந்த இரு வாரங்களுக்கு முன்பு புதுச்சேரி வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அரவிந்தர் ஆசிரமம், அன்னை சமாதி ஆகிய இடங்களுக்குச் சென்று வழிபாடு செய்தார். அப்போது புதுச்சேரி மாநில பாஜக தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சுவாமிநாதனும் அவருடன் சென்றார். அப்போது அங்கிருந்த வடக்கு காவல் கண்காணிப்பாளர் சுந்தர் கோர்ஸ், சுவாமிநாதனை தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. எனவே சுந்தர் கோர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் இன்று, காவல் தலைமை அலுவலகத்திற்கு டிஜிபி பாலாஜி ஸ்ரீவட்சாவை சந்திக்கச் சென்றனர்.
டிஜிபியைச் சந்திக்க அனுமதி மறுப்பு - பாஜகவினர் திடீர் தர்ணா! - சுந்தர் கோர்ஸ்
புதுச்சேரி: டிஜிபியைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் காவல் தலைமை அலுவலகத்தில் பாஜகவினர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
bjp
அப்போது டிஜிபியைச் சந்திக்க பாஜகவினருக்கு காவலர்கள் அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் காவல் தலைமை அலுவலக வாசற்படியில் மாநில துணைத்தலைவர் செல்வம் தலைமையில் திடீர் தர்ணாவில் அமர்ந்தனர். இதையடுத்து அங்கிருந்த காவல் துறையினர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: எரிவாயு உருளை விலை உயர்வு: பெண்கள் ஒப்பாரி போராட்டம்!