தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எதிர்க்கட்சிகளை வலைக்கும் பாஜக? - பிஜு ஜனதா தளம்

டெல்லி: மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பிஜு ஜனதா தளம் வாக்களித்ததால், பாஜகவைச் சேர்ந்த அஸ்வினி பாய்ஷ்நப் மாநிலங்களவைக்கு செல்வது உறுதியானது.

Amit Shah And Modi

By

Published : Jun 28, 2019, 9:29 PM IST

மக்களவைத் தேர்தலின் போது பாஜகவை கடுமையாக எதிர்க்காத ஒரு சில கட்சிகளில் பிஜு ஜனதா தளமும் ஒன்றாகும். பாஜகவுக்கு தேவையான எண்ணிக்கை மக்களவையில் கிடைக்கவில்லை எனில் பிஜு ஜனதா தளம் அக்கட்சிக்கு உதவும் என, பல தரப்பினர் கூறி வந்தனர். ஆனால் மக்களவையில் பாஜக தனிப்பெரும்பான்மையும் ஆட்சி அமைத்தது.

இருப்பினும் ஒடிசா மாநிலத்திற்கு தேவையான உதவிகளை மோடி அரசு செய்து அம்மாநில முதலமைச்சரான நவீன் பட்நாயக்கிடம், பாஜக நட்பு பாராட்டி வந்தது. இந்நிலையில் ஒடிசா சட்டப்பேரவையில் பாஜகவுக்கு தேவையான எண்ணிக்கை இல்லாதபோதும் அதன் வேட்பாளரான அஸ்வினி பாய்ஷ்நபை மாநிலங்களவைக்கு செல்ல பிஜு ஜனதா தளம் உதவியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details