தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகார் தேர்தல்: தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்ட திருநங்கை! - திருநங்கை அலுவலர்

மோனிகா தாஸ் எனும் திருநங்கையை பாட்னாவில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்தின் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமித்துள்ளது தேர்தல் ஆணையம்.

transgender appointed as presiding officer
transgender appointed as presiding officer

By

Published : Oct 5, 2020, 12:17 PM IST

பாட்னா: 32 வயதான திருநங்கை மோனிகா தாஸ், நவம்பர் 3ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள மையத்தின் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். பாட்னாவைச் சேர்ந்த இவர், கனரா வங்கி அலுவலர் ஆவார்.

இந்தப் பணிக்காக அவருக்கு வருகிற அக்டோபர் 8ஆம் தேதி முதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பாட்னாவின் கர்தானிபாக் பகுதியில் தேர்தல் ஆணைய அலுவலர்களால் இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.

பிகார் சட்டப்பேரவை தேர்தலில், தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை மோனிகா தாஸ். இதற்கு முன்பு மேற்கு வங்கத்தில் ரியா சர்கார் (திருநங்கை) எனும் பள்ளி ஆசிரியை தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மூன்றுகட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குகள் எண்ணிக்கை நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஹத்ராஸ் விவகாரம்: பீம் ஆர்மி தலைவர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details