டெல்லி:முதல் கட்ட பிகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக காங்கிரசின் மத்திய தேர்தல் குழு (சி.இ.சி) இடைக்கால கட்சித் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை (அக்.14) மாலை சந்திக்கிறது.
பிகார் தேர்தலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட வேட்பாளர்களை தீர்மானிக்கும் குழுவின் இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.
பிகாரில் மகா கூட்டணி அமைத்து எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. இந்த கூட்டணியில் காங்கிரஸூக்கு 70 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. பிகார் தேர்தல் குழு, ரந்தீப் சுர்ஜேவாலா தலைமையில் சோனியா காந்தியால் அமைக்கப்பட்டது.
இதில், மோகன் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார், எனினும் பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் மதன் மோகன் ஜா, தலைவர் சதானந்த் சிங் , முக்கிய தலைவர் மாநிலங்களவை எம்.பி. மற்றும் பரப்புரை குழுவின் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் ஆகியோர் கமிட்டியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் 41 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது, அதில் 27 வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றனர், ஆனால் ஜே.டி.யு கூட்டணியில் இருந்து விலகியவுடன், எம்.எல்.ஏ.க்களில் ஒரு பகுதியினர் கட்சியை விட்டு வெளியேறி பின்னர் ஜே.டி.யுவில் சேர்ந்தனர்.
இந்த முறை, கட்சியுடன் நீடித்த அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் மீண்டும் போட்டியிட சீட் வழங்க காங்கிரஸ் உறுதியுடன் இருக்கிறது.
இது பிகாரில் காங்கிரஸூக்கு மாபெரும் சவாலாக இருக்கிறது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மகா கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. 243 தொகுதிகள் கொண்ட மாநிலத்துக்கு, அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7ஆம் தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
இதையும் படிங்க: தந்தையை திட்டமிட்டு அவமதித்த நிதீஷ் குமார் : பாஸ்வான் மகன் பகீர் குற்றச்சாட்டு!