பிகாரில் பெய்த கனமழை காரணமாக கடந்த வாரம் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் இதுவரை 102 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் உள்ள கஜிரங்கா தேசிய பூங்காவில் மட்டும் 141 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உள்ளூர்வாசிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வீடுகளையும் உடைமைகளையும் இழந்து ஒரு வாரத்திற்கும் மேலாக கடும் அவதிபட்டு வரும் தர்பங்கா கிராம மக்கள், வேறு வழியின்றி தங்களை தற்காத்துக்கொள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் தார்பாயில் குடிசை அமைத்து தஞ்சம் அடைந்துள்ளனர்.
நெடுஞ்சாலையில் தங்கியுள்ள மக்களின் பாதுகாப்பு மற்றும் வாகன போக்குவரத்து சேவைகள் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.