மூளைக்காய்ச்சலால் பலியான 173 பேரில், ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி; மருத்துவமனையில் 95 பேரும், முசாஃபர்பூரில் உள்ள கெஜ்ரிவால் தனியார் மருத்துவமனையில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த இரு மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூளைக்காய்ச்சல்: பிகாரில் இதுவரை 173 பேர் இறப்பு! - மூளைக்காய்ச்சல் வைரஸ்
பிகார்: மூளைக்காய்ச்சலால் முசாஃபர்பூர், அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது.
Bihar
அடுத்த 24 மணிநேரத்தில் அனைத்து மருத்துவமனைகளும் உஷார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மூளைக்காய்ச்சல் நோயால் குழந்தைகளின் இறப்பு 124ஆக அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குள் நாள் அதிகரித்துள்ள நிலையில், இதில் பெரும்பாலும் குழந்தைகளே இந்தக் காய்ச்சலால் உயிரிழக்கும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.