பாட்னா:கரோனா வைரசுக்கு மத்தியில் பிகாரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இலவச கரோனா தடுப்பூசி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சி பாஜகவுடன் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றியது.
இதையடுத்து முதல்கட்டமாக பிகார் மாநில அமைச்சரவை கரோனா தடுப்பூசி கிடைக்கப்பெற்றதும் மக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பெண்களைத் தொழில்முனைவோராக மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டத்தையும் அம்மாநில அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக, 50 விழுக்காடு வரை வட்டி இல்லா கடனையோ அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு கூடுதலாக 50 விழுக்காடு மானியம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், திருமணமாகாத பெண்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற பிறகு ரூ.25 ஆயிரமும், பட்டப்படிப்பு தேர்ச்சிபெற்ற பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதி உதவி கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.