தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறுவனை பலியிட்ட தாய்மாமன்! - குழந்தை வரம்வேண்டி நடந்த கொடூரம்! - மாமா தனது மருமகனை பாகல்பூரில் கொன்றார்

பீகார்: பாகல்பூர் அருகே ஷிவ்னந்தன் ரவிதாஸ் என்பவர் தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி தனது சகோதரியின் 10 வயது மகனை பலியிட்டுள்ளார்.

bihar boy sacrificed on the altar of superstition, குழந்தைபாக்கியம் பெற 10 வயது மருமகனை பலியிட்ட மாமனார்

By

Published : Oct 29, 2019, 10:18 AM IST

Updated : Oct 29, 2019, 10:27 AM IST

பீகார் மாநிலம் பாகல்பூர் அருகேஷிவ்னந்தன் ரவிதாஸ் என்பவர் தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி மாந்திரீகரிடம் கேட்டுள்ளார். அதற்கு மாந்திரீகர் குழந்தை பாக்கியம் பெறவேண்டுமென்றால் காளிக்கு ஒரு சிறுவனை பலியிடுமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து தனக்கு குழந்தை கிடைக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் தாஸ், தனது 10 வயது மருமகனை பலியிட முடிவுசெய்தார்.

தீபாவளியன்று இரவு தனது மருமகனுக்கு பட்டாசு வாங்கித்தருவதாகக்கூறி காளி கோவிலுக்கு கூட்டிச் சென்று அவனை பலியிட்டுள்ளார்.

மறுநாள் காலை காளி கோயில் முன்பு ரத்தக்கரை இருப்பதைப் பார்த்த பொதுமக்கள் காவல் துறைக்கு தகவலளித்தனர்.

bihar boy sacrificed on the altar of superstition, குழந்தைபாக்கியம் பெற 10 வயது மருமகனை பலியிட்ட தாய்மாமன்

சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சிறுவனின் தாய்மாமன் தாஸையும், பலியிடச்சொன்ன மாந்திரீகரையும் கைது செய்தனர்.

இவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென சிறுவனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தொலைக்காட்சியில் மூழ்கிய பெற்றோர்; நீரில் மூழ்கிய குழந்தை! - அலட்சியத்தால் இன்னொரு இரண்டு வயதுக் குழந்தை பலி!

Last Updated : Oct 29, 2019, 10:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details