பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ் பிகார் சட்டப்பேரவை தேர்தல் 2020 இல் எதிர்க்கட்சி கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார் என்று காங்கிரஸ் சனிக்கிழமை (அக்.3) ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்துள்ளது.
"ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் (யுபிஏ) அனைத்து கட்சிகளும் பிகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணியாக ஒன்றிணைய முடிவு செய்துள்ளன. இந்த மகா கூட்டணியில் காங்கிரஸ், ஆர்ஜேடி, சிபிஐ, சிபிஎம் மற்றும் விகாஷீல் இன்சான் கட்சி ஆகியவை உள்ளன.
தற்போது கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது. அதன்படி, எதிர்க்கட்சியான ஆர்ஜேடி 144 இடங்களில் போட்டியிடும், அதே நேரத்தில் காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிடும். இடதுசாரிக் கட்சிகள் 29 இடங்களில் போட்டியிடுகின்றன.