பிகார் மக்களவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய மகாகத்பந்தன் எனும் மெகா கூட்டணியின் தொகுதி உடன்பாடு மார்ச் 22 ஆம் தேதி அறிவிக்கப்படும் என லோக்தந்திரிக் ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார்.
'தொகுதி உடன்பாடு மார்ச் 22 ஆம் தேதி அறிவிக்கப்படும்'- சரத் யாதவ்! - உடன்பாடு
பாட்னா: "பீகாரில் மகாகத்பந்தனின் தொகுதி உடன்பாடு மார்ச் 22 ஆம் தேதி அறிவிக்கப்படும்" என, சரத் யாதவ் கூறியுள்ளார்.
சரத் யாதவ்
ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ் இடையே பல நாட்களாக தொகுதி உடன்பாட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், ஒன்பது தொகுதிகளுக்கு காங்கிரஸ் உடன்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, 11 தொகுதிகள் கேட்டு காங்கிரஸ் அடம்பிடித்ததாகவும், ஆனால் தற்போது அரசியல் அழுத்தம் காரணமாக உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடம் கொடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. பீகாரில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற உள்ளது.
Last Updated : Mar 21, 2019, 7:44 AM IST