சீனா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் எல்லைப் பூசலில் ஈடுபட்டுவந்த நிலையில், பூட்டானும் தற்போது மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்தியா - பூட்டான் எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குப் பாசனத்திற்குச் செல்லும் செல்லும் நீரை தடுத்து வைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே இந்தியாவின் அண்டை நாடுகள் எல்லைப் பகுதிகளில் தொடர் பூசலை மேற்கொண்ட நிலையில் தற்போது மற்றொரு அண்டை நாடான பூட்டானும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த தகவல் ஏதும் அடிப்படையற்றவை என பூட்டான் அரசு மறுத்துள்ளது. இது குறித்து பூட்டான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவுக்கு வரவேண்டிய நீர் பாசனத்தை பூட்டான் தடுத்து நிறுத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதில் எந்த வித உண்மையும் இல்லை. அசாம் - பூட்டான் மக்களிடையே திகழும் நல்லுறவை கெடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இது போன்ற பொய் தகவல் பரப்பப்படுகின்றன' எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:சசிகலா விடுதலை... அதிமுகவின் தலைமைகள் அதிர்ச்சி - சூடுபிடிக்கும் தமிழ்நாடு அரசியல்