தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சந்திரயான்-2: பூடான் பிரதமர் வாழ்த்து!

திம்பு: இஸ்ரோ அறிவியல் அறிஞர்களின் கடின உழைப்பு, துணிவு ஆகியவை வரலாற்று சிறப்புமிக்கவை என பூடான் பிரதமர் லோடாய் ஷேரிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

Bhutan PM

By

Published : Sep 7, 2019, 1:09 PM IST

இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான் 2 விண்கலம் ஜூலை 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டு, பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஆர்பிட்டர் எனப்படும் வட்டமடிப்பானிலிருந்து பிரக்யானுடன் (ஆய்வூர்தி) 'விக்ரம்' லேண்டர் பிரிந்து நிலவில் தரையிறங்க நேற்று புறப்பட்டது.

ஆனால், நிலவின் தரையிலிருந்து 2 கி.மீ. தொலை தூரத்திலிருந்த விக்ரம் லேண்டர் 2:20 மணிக்கு இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இருப்பினும் இஸ்ரோவின் கடுமையான முயற்சிக்கு பலர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

பூடான் பிரதமரின் ட்வீட்

இது குறித்து பூடான் பிரதமர் லோடாய் ஷேரிங் தன் ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவையும், அதன் அறிவியல் அறிஞர்களையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன். சந்திரயான்-2 கடைசி சில நிமிடங்களில் சோதனையை சந்தித்தபோதிலும், அறிவியல் அறிஞர்களின் கடின உழைப்பு, துணிவு ஆகியவை வரலாற்று சிறப்புமிக்கவை. இஸ்ரோவும் பிரதமர் மோடியும் வருங்காலத்தில் சாதனை படைப்பார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details