நாடு முழுவதும் கரோனா வைரசின் (தீநுண்மி) தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசிற்கு கரோனா தீநுண்மி பெரும் அச்சுறுத்தலாக இருந்துவருகிறது.
நேற்று (மே 9) கரோனா தீநுண்மியால், 116 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் இந்தக் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்றாயிரத்து 457 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 211 ஆகவும் அதிகரித்துள்ளது.
மாநிலம் முழுவதும் 625 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. சிவப்பு மண்டலாக அறிவிக்கப்பட்டுள்ள மாநில தலைநகர் போபாலில், இதுவரை 704 பேர் தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.