புதுச்சேரி அரசு கலைப் பண்பாட்டுத் துறையும், தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து, பாவேந்தர் பாரதிதாசனின் 129ஆவது பிறந்தநாள் விழாவை அரசு சார்பில் இன்று கொண்டாடியது.
பாவேந்தர் பாரதிதாசனின் 129ஆவது பிறந்த நாள் விழா - பாவேந்தர் பாரதிதாசன்
புதுச்சேரி: பாவேந்தர் பாரதிதாசனின் 129ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு புதுச்சேரி பெருமாள் கோயில் வீதியில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் வாழ்ந்த வீடு உள்ள நினைவு அருங்காட்சியகத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கணேசன் கலந்துகொண்டு அவரது சிலைக்கும், அவரது உருவப்படத்திற்கும் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
விழாவில் பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன், பேரன் கோ பாரதியுடன் தமிழறிஞர்கள் பலர் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். விழாவில் முனைவர் புவனேஸ்வரி, கவிஞர் உமாபதி, கவிஞர் வெங்கடசுப்பு ஆகியோர் பங்கேற்று கவிதை வாசித்தனர். அதனைத் தொடர்ந்து அபிநய நாட்டியாலயா குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கீத நாட்டியாலயா குழுவினர் பாரதிதாசன் படைப்புகளை நாட்டிய நாடகமாக நடத்திக் காட்டினர்.