டெல்லி:இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பு மருந்தான கோவாக்சினை அவசரகாலத் தேவைக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி, மத்திய அரசின் வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து தயாரித்துள்ள இந்தத் தடுப்பூசியினை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கடந்த ஜூலை 1ஆம் தேதி அனுமதியளித்தது.