மத்திய நீர்வளம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், சில நாள்களுக்கு முன்பு, “நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கரோனா வைரஸை விரட்டும் பண்பு இந்த அப்பளத்திற்கு உண்டு. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், இந்த ‘பாபிஜி’ அப்பளம் தயார் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "முதல் கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை. ஆனால், இரண்டாம் பரிசோதனையில் கரோனா தொற்று எனக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தயவுசெய்து உங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.