மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினர் பெங்களூருவின் ஆ.டி நகரில் வசித்து வந்தனர். இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அவர்கள் கார் மூலம் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஆம்புன்ஸ் மீது கார் மோதியது. இதில், தீபக் தே(46), சுவாகரா சோதாரி (42), சுஜய்யா(45), ஜெயந்தி(65), துருவ் தேவ்(14) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆம்புலன்ஸ் மீது கார் மோதி 5 பேர் பலி! - ஐந்து பேர்
பெங்களூரு: எலங்காவில் ஆம்புலன்ஸ் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக பலியாகினர்.
5 பேர் பலி
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், சுஜய்யாவை விமான நிலையத்தில் விடுவதற்காக குடும்பத்தினர் சென்றபோது இந்த விபத்து நடைபெற்றதாக தெரிவித்தனர்.