கொல்கத்தா (மேற்கு வங்கம்): சுந்தரவனக் காட்டிலுள்ள ஆண் புலிக்கு ரேடியோ காலரை வனத் துறையினர் பொருத்தியுள்ளனர்.
சுந்தரவனக் காட்டுப் புலிக்கு பொருத்தப்பட்ட ரேடியோ காலர்! - தடம் கண்டறியும் கருவி
புலிகளைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கு வங்க மாநில வனத் துறையினரால் சுந்தரவனக் காட்டிலுள்ள ஆண் புலிக்கு ரேடியோ காலர் (தடம் கண்டறியும் கருவி) பொருத்தப்பட்டுள்ளது.
Sunderban Tiger Reserve
புலிகளை பாதுகாக்க மேற்கு வங்க மாநில வனத் துறை பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புலிகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இச்சூழலில், சுந்தரவனக் காட்டிலுள்ள ஒரு ஆண் புலிக்கு, தடம் கண்டறியும் கருவியான ரேடியோ காலரை வனத் துறையினர் கட்டிவிட்டுள்ளனர். இதிலிருந்து கிடைக்கப்பெறும் தகவல்களைக் கொண்டு புலிகளின் நடமாட்டத்தை கண்டறிய வனத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.