நாட்டில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதையடுத்து, பல மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளது. எனவே இளம் மற்றும் நலிந்த வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்கள் ஆகியோருக்கு இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
மாநில வழக்கறிஞர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 20,000 ரூபாய் உதவித் தொகை அளிக்க வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இதற்காக பிரத்யேக உதவி எண்கள், வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.