முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி(66) இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அதையடுத்து அவர் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
பிசிசிஐக்கு அதிக பங்களிப்பு தந்தவர் அருண் ஜேட்லி! - அருண் ஜேட்லி காலமானர்
சென்னை: அருண் ஜேட்லி பிசிசிஐக்கு அதிக பங்களிப்பை தந்துள்ளார் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அருண் ஜேட்லி
அதன் ஒரு பகுதியாக பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தன் இரங்கல் செய்தியில், ’நெருங்கிய நண்பரான அருண் ஜேட்லியின் இறப்பு நிறைவு செய்யமுடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பிரிவு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞரும், சிறந்த அரசியல் தலைவருமான அவருக்கு கிரிக்கெட்டில் ஆழமாக நாட்டம் கொண்டவராவர். பிசிசிஐயில் இரு தசாப்தங்களாக தன் பங்களிப்பை அளித்தவர்’ என கூறியுள்ளார்.