இந்தியாவின் மிக முக்கிய நதிகளில் ஒன்று யமுனை. இமயமலையில் அமைந்துள்ள யமுனோத்திரில் தொடங்கி அலகாபாத்திலுள்ள கங்கை கரையில் யமுனை நதி கலக்கிறது. இந்நிலையில், தலைநகர் டெல்லி வழியாக யமுனை தனது பயணத்தை மேற்கொள்கிறது.
அசுத்தமாகும் யமுனை ஆறு - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை! - save
புதுடெல்லி: யமுனை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை
இத்தகைய சூழலில், தலைநகர் டெல்லியில் யமுனை ஆற்றில் அதிகளவிலான கழிவுகள் கொட்டப்படுவதால், நாளுக்குநாள் அசுத்தம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சாந்தினி சவுக் பகுதியில் கழிவுகள் தொடர்ந்து நீரில் கலப்பதாக கூறப்படுகிறது.
இதனை சுத்தம் செய்ய மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எனினும், மக்களின் அலட்சியமான செயல்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது வருத்தமளிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தள்ளனர்.