உத்திர பிரதேச மாநிலத்தின் பரேலி தொகுதி எம்.எல்.ஏ வாக இருந்து வருபவர் ராஜேஷ் மிஸ்ரா. இவரது மகள் சாக்ஷி, அஜிதேஷ் குமார் என்னும் தலித் இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து, தங்களது குடும்பத்தினரால் ஆபத்து இருப்பதாக சாக்ஷி, அஜிதேஷ் ஆகியோர் வீடியோ ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினர்.
சாக்ஷி மிஸ்ராவின் திருமணம் செல்லும்; அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு! - couples
பிரயாக்ராஜ்: உத்திர பிரதேச பாஜக எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ராவின் மகள் சாக்ஷியின் திருமணம் செல்லும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக்கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சாக்ஷி, அஜிதேஷ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, சாக்ஷி மிஸ்ரோவின் திருமணம் செல்லும் என்று கூறினார். மேலும், இவர்களுக்கு உரிய காவல்துறை பாதுகாப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்க வேண்டும் என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.