அமெரிக்காவும் கறுப்பினத்தவரும்
அமெரிக்காவில் நடைபெறும் குற்றங்களில் பெரும்பாலானவை இன்றும் நிறவெறி சார்ந்தவை. கி.பி. 1600-களில் மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பின மக்கள் கொத்துக்கொத்தாக இரக்கமின்றி பிடித்துவரப்பட்டார்கள். அதற்குப்பின் வந்த ஆசியர்களும், இலத்தீன் அமெரிக்கர்களும் அடிமை பட்டியலில்தான் சேர்க்கப்பட்டனர்.
கறுப்பினத்தவர்களின் உழைப்பு முற்றிலுமாக சுரண்டப்பட்டது. உலக நாடுகளுக்கு மனித உரிமைகள் பற்றி பாடமெடுக்கும் அமெரிக்காவின் உண்மை முகம் மிகவும் கோரமானது. வாஷிங்டனில் இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற கேப்பிட்டல் கட்டடம், சுதந்திரதேவி சிலை உள்ளிட்டவற்றைக் கட்டியெழுப்புவதற்கு வேலை செய்தவர்கள் கறுப்பின அடிமை மக்கள். உலக நாடுகளால் இன்றளவும் கொண்டாடப்படும் அமெரிக்கப் பெருமிதச் சின்னங்கள் பலவும் கறுப்பின மக்கள் ரத்தம் சிந்த உழைத்ததனால் விளைந்தவையே!
இந்தக் கட்டட வேலை செய்த கறுப்பின மக்களுக்கு கூலி தராமல், அவர்களை வேலை வாங்கிய வெள்ளை முதலாளிகளுக்குத்தான் கூலி தரப்பட்டது எனக் கூறப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, மார்ட்டின் லூதர் கிங் காலத்தில், அதாவது 1950-60களில் நிறவெறிக்கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள் தோன்றின. சட்டம் என்பது வெறும் நீதிமன்றங்கள் அளவில்தானே.
கல்லூரியில் கறுப்பின மாணவனை வெள்ளையர்கள் தாக்குவதும், வர்க்க ரீதியான பிளவுக்குள் கறுப்பின குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்குப் போராடுவதும் இன்றும் மறைமுகமாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. உலக நாடுகளின் முன்பு சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும் பீற்றித் திரியும் அமெரிக்காவில் இன்று வெள்ளையர்களும், கறுப்பர்களும் ஒரே இடத்தில் வாழ முடியுமா எனக் கேள்வியெழுப்பினால் முடியாது.
1960களிலேயே அமெரிக்கா நிலவுக்கு மனிதனை அனுப்பி தன்னை வல்லரசு எனப் பிரகடனப்படுத்தியது. ஆனால், கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை தன் தலைவனாக ஏற்றுக்கொள்ள இருபதாம் நூற்றாண்டு வரை காலமெடுத்துக் கொண்டது.
இனவெறி என்ற காரிருளை அகற்ற உதித்த ஒபாமா
கலப்புத் திருமணம் செய்துகொண்ட கறுப்பர் இனத்தைச் சேர்ந்த தந்தைக்கும், வெள்ளையர் இனத்தைச் சேர்ந்த தாய்க்கும் ஹவாய் தீவில் 1961 ஆகஸ்ட் 4ஆம் தேதி பிறந்தார் ஒபாமா. என்னதான் வெள்ளையர் இனத் தாய்க்குப் பிறந்தாலும், ஒபாமாவும் நிறவெறிக் கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறார். ஆனால் அந்த கறுப்பின புதல்வனுக்கு அன்று தெரியவில்லை தான் அமெரிக்காவின் அதிபராகப் போகிறோம் என்று.
ஒபாமா தனது மனைவி மிஷல் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் 2009ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் சார்பாக அதிபர் வேட்பாளராக பராக் ஒபாமா போட்டியிட்டார். ’வீ கேன் (We can)’ என்ற மந்திரச் சொல்லாலும், தனது அபார பேச்சாற்றலாலும் அனைத்து அமெரிக்கர்களையும் ஒபாமா கட்டிப்போட்டார். கறுப்பின மக்கள் தங்களது விடுதலை சின்னமாக ஒபாமாவைக் கருதினர். அமெரிக்கா முழுவதும் ஒபாமா அலை எழுந்தது. இதனை பலர் கொண்டாடவும், சிலர் தூற்றவும் செய்தனர்.
இருபத்தாறு விழுக்காடு அமெரிக்கர்கள் ஒபாமாஇஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர் என்றும், அவருக்கு உண்மையான கறுப்பர்களின் துயரம் தெரியாது எனவும் விமர்சித்தனர். ஆனால், அத்தனை தடைகளையும் உடைத்து ஒபாமா தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு இணையான வாக்குகள் பெற்று அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் என்ற பெருமையை வரலாற்றில் எழுதிச் சென்றார்.
வரலாறு படைத்த ஒபாமா
பதவியேற்கும் தினத்தன்று ஆபிரகாம் லிங்கன் தனது பதவிப்பிரமாணத்தின்போது பயன்படுத்தியது போன்றே ஒபாமாவும் பைபிளில் தனது இடது கையை வைத்தும், வலது கையை உயர்த்தியும் பதவி ஏற்றுக்கொண்டார். இதில் சிறப்பு என்னவென்றால் லிங்கன் பயன்படுத்திய அதே பைபிளைத்தான் ஒபாமவும் பயன்படுத்தியுள்ளார்.
பல லட்சக்கணக்கான கறுப்பின மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது வாஷிங்டனில் ஒபாமாவின் வெற்றியைத் தங்களது பல ஆண்டு கால அடிமைத்தனத்துக்கு எதிரான வெற்றியாகக் கருதி, கோஷங்கள் எழுப்பி கொண்டாடித் தீர்த்தனர். மேலும், பல நூற்றாண்டுகளின் அடிமைத்தனத்தை உடைத்தெறிந்த சாகசக்காரராகவும் ஒபாமாவை பார்த்தனர்.
ஒபாமா புலி என்றால், மிஷல் சிங்கம் ஒபாமா ஆட்சி செய்த எட்டு ஆண்டு காலங்களும், மிகப்பெரிய அதிரடி மாற்றத்தைத் தராவிட்டாலும் அனைத்துத் துறைகளிலும் சராசரி வளர்ச்சியைக் கண்ட ஆட்சிக்காலமாக அமைந்தது. ஒபாமா அரசியல் பரிணாமத்தோடு, தன்னால் இயன்றவரை அனைத்து நாடுகளுக்கும் சமத்துவத்தைப் பரப்பினார்.
எளிய தலைவர் ஒபாமா
ஒபாமா தனது குடும்பத்தையும், அரசியல் வாழ்க்கையையும் மிகவும் எளிமையாகவும், அதே சமயம் மிகவும் வெளிப்படையாகவுமே வைத்திருந்தார். தனது காதல் மனைவிக்காக பாடல் பாடுவது, நடனம் ஆடுவது என இளமைத் ததும்பும் உலக தலைவராகக் பார்க்கப்பட்டார். உலகின் மிகவும் அதிகாரம் பொருந்திய பதவியிலிருந்த ஒபாமா தனது காதல் மனைவி மிச்செல் ஒபாமாவின் முடிவுகளையும் கருத்தில் கொண்டு செயல்பட்டது அனைவரையும் ரசிக்கவைத்தது.
ஒபாமா தனது குழந்தைகளான மாலியா, சாஷாவின் விடுமுறை காலத்தில் அவர்களுடன் நேரம் செலவிடுவது, வெள்ளை மாளிகைக்கு வரும் குழந்தைகளைக் கொஞ்சி விளையாடுவது, கிஸ்கேமில் வலம்வருவது என மிகவும் அட்ராக்ட்டிவான, எளிமையான தலைவராக வாழ்ந்தார்.
ஒபாமா என்னும் காதலன்
ஒபாமா, மிச்செல் ஒபாமாவின் க்யூட்டான காதல் கதையை உலக மக்கள் அனைவரும் ரசித்துத் தீர்த்தனர். ஒபாமா புலியாக இருந்தால், மிச்செல் சிங்கமாக இருந்தார். ’ஸ்டார் பிட்னஸ்’ பட்டியலில் ஒபாமாவும், அவரது குடும்பத்தினரும் இடம்பெற்றிருந்தனர். மிச்செல் ஒபாமாவின் தன்னம்பிக்கை பேச்சுகள் அத்தனையும் உலக மக்கள் அனைவரையும் அவர் மீது மரியாதை கொள்ளச் செய்தது.
ஒபாமாவின் சொத்துகளில் பெரும்பாலான சொத்துகள் அவர் புத்தகம் எழுதி அதன் மூலம் சம்பாதித்ததுதான். இதுவரை அவரது புத்தகங்களுக்காக இரண்டு முறை கிராமி விருதினைப் பெற்றிருக்கிறார். மேலும், அமைதிக்கான நோபால் பரிசினையும் பெற்றிருக்கிறார்.
தடைகளைத் தகர்த்தெறிந்து உலகத் தலைவரான ஒபாமா
பதவிக்காலம் முடிந்த கடைசி நாள் அன்று ஒபாமாவும், அவரது குடும்பத்தினரும் மட்டும் கண்ணீர் விடவில்லை. மாறாக, பல லட்சக்கணக்கான அமெரிக்கர்களும், பல கோடிக்கணக்கான உலக மக்களும் அந்த கறுப்பர் இனத் தலைவனுக்காக மனம் வெம்பினர் என்றால் அது மிகையல்ல. மக்களால் தலையில் தூக்கி கொண்டாடப்படும் தலைவனே மக்கள் நாயகன். ஆம்... ஒபாமா என்றும் மக்களின் நாயகனே!
தடைகளைத் தகர்த்தெறிந்து உலகத் தலைவரான ஒபாமா வாழ்க்கையில் வெற்றிபெற்ற ஒருவருக்கு என்றுமே மிகப்பெரிய எதிரி, அவரது ‘வெற்றி’ மட்டுமே. ஒபாமா அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக தேர்தலில் வெற்றிபெற்று, தனது கனிவான பண்புகளாலும், பேச்சாற்றலாலும், பலரது மனத்தினை வென்று 'நான் கோட் போட்றது தான் உன் பிரச்னைனா... கோட் போடுவேன் டா' என்ற ஸ்டைலில் அஹிம்சை முறையில் உலக அளவில் கபாலியாக உருவெடுத்த தலைவன் ஒபாமா.