தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திவாலான காங்கிரஸுக்கு அரசை குறை கூற மட்டுமே தெரியும் - பாஜக

டெல்லி: திவாலாகிப்போன காங்கிரஸ் தலைமைக்கு அரசை குறை கூறுவதைத் தவிர ஆக்கப்பூர்வமாக வேறெதுவும் செய்யத் தெரியாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Prakash
Prakash

By

Published : Apr 25, 2020, 12:17 PM IST

இந்தியாவில் கரோனா பாதிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசின் சில செயல்பாடுகளின் மீது காங்கிரஸ் விமர்சனங்களை முன்வைத்துவருகிறது. லாக் டவுனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிக் கணக்கில் நிதியுதவி வழங்கக்கோரி தொடர்ச்சியாக வலியுறுத்தப்படுகிறது.

அண்மையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை ஓராண்டு காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. இதற்கு பதிலடி தரும் விதத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேக்கர் கருத்து தெரவித்துள்ளார்.

இது குறித்து அவர், ”நாடு முழுவதும் உள்ள ஏழைகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவுக்கு எதிராக போராடிவருகின்றனர். இந்த வேளையில், திவாலான நிலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அரசை எதிர்ப்பதையே ஒரே நோக்கமாகக் கொண்டுள்ளது.

அரசின் நடவடிக்கைகளை ராகுல் காந்தியும் அவரது கூட்டமும்தான் எதிர்த்துவருகின்றனர். மற்றவர்கள் அனைவரும் அரசின் பக்கம் நின்று வைரஸை எதிர்கொள்ள பாடுபடுகிறோம்” என்றார்.

இதையும் படிங்க:சென்னை நிலைமை மோசம் - உள்துறை அமைச்சகம்

ABOUT THE AUTHOR

...view details