குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் நீது தேஜ்வானி. இவர் குடியிருப்புப் பகுதிகளுக்கு குடிநீர் முறையாக வழங்குவதில்லை எனக் கூறி அஹமதாபாத்தில் உள்ள நரோடாவில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
நிகழ்விடத்திற்கு வந்த பாஜக எம்எல்ஏ பல்ராம் தவானி, அவரை கலைந்து செல்லும்படி கூறியுள்ளார். இதற்கு மறுத்த அவரை பல்ராம் தவானி கடுமையாக தாக்கி முடியை பிடித்து இழுத்து சாலையில் தள்ளினார்.
இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்த பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாகியதால் பல தரப்பு பாஜகவினரை கடுமையாக விமர்சித்தனர். பெண்னை தாக்கியதற்கான காரணத்தை விளக்கம் அளிக்கக் கோரி பாஜக தலைமை, பல்ராம் தவானிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.